கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் கஜிமா தோட்ட வீடுகள் மூன்றாவது தடவையாக தீவிபத்தை சந்தித்துள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம அதிகாரி பிரதீப் பெரேரா தெரிவித்துள்ளார் .
இத்தோட்டத்தில் வசிக்கும் சிலர் அரசிடமிருந்து இரண்டு மூன்று நிரந்தர வீடுகளைப் பெற்றாலும் அவர்கள் இன்னமும் அத் தோட்டத்திலேயே வாழ்ந்து வருவதாக கிராம அதிகாரி பிரதீப் பெரேரா இன்று (28) நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதேவேளை 2014 ஆம் ஆண்டு அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டு காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இங்கு 20 குடும்பங்கள் மட்டுமே குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 200 குடும்பங்கள் அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்கள் எனவும் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கு அனுமதியற்றவர்கள் குடியேறியுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.