வெளிநாடுகளுக்கு தேங்காய் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமையால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில்துறை வீழ்ச்சியடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் இன்னமும் பிரச்சினைகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.