இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபேயின் அரச இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றிருந்த நிலையிலேயே நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறைந்தது 10 நிமிடங்கள் வரை இருவரும் சந்தித்து கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலை மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக நரேந்திர மோடி ரணில் விக்ரமசிங்கவிடம் வினவியுள்ளார்.
இதனையடுத்து இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை சாதகமாக ஏற்றுக்கொண்ட நரேந்திர மோடி, இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.