கொழும்பு நகரில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தி இன்று உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 7 தரப்பினரை பிரதிவாதிகளாகக் குறிப்பிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா மற்றும் முஜிபர் ரகுமான் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
ஃபார்மன் காசிம் பிசி, சட்டத்தரணி சந்துன் கமகே பட்வின் சிறிவர்தன மற்றும் யோஹான் குரே ஆகியோரின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.