Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சீன ஜனாதிபதி

வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சீன ஜனாதிபதி

இம்மாதத்தின் நடுப்பகுதியில் மத்திய ஆசியாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவுசெய்த சீன ஜனாதிபதி, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவியதன் பின்னர் முதல் தடவையாக பொது வெளியில் தோன்றியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் நேற்று பீஜிங்கில் ஒரு கண்காட்சியை பார்வையிட்டார். உஸ்பெகிஸ்தானில் நடந்த மாநாடொன்றில் கலந்துகொண்டு சீனா திரும்பியதிலிருந்து, பெய்ஜிங்கில் இராணுவ சதிப்புரட்சிகள் பற்றிய ஆதாரமற்ற தகவல்களால் மக்கள் பார்வையில் இருந்து ஜனாதிபதி ஸி ஜின்பிங் விலகியிருந்தார்.

மோசமான பொருளாதாரம், COVID-19 தொற்றுநோய் மற்றும் அரிதான பொது எதிர்ப்புகள், அத்துடன் மேற்கு நாடுகளுடன் அதிகரித்து வரும் முறுகல்கள் மற்றும் தாய்வான் மீதான பதற்றங்கள் இருந்தபோதிலும், “சீனர்களின் புத்துயிர் பெறுவதற்கான தனது மகத்தான பார்வையைத் தொடர ஸி ஜின்பின் தமது அதிகாரத்தில் உறுதியாக உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles