ஆசிய பசிபிக் நாடுகளில் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ABD) 14 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.
2022-2025 காலப்பகுதிக்காக இந்த உதவிகள் வழங்கப்படும் என்று அதன் தலைவர் மசாட்சுகா அசகாவா தெரிவித்துள்ளார்.
இந்த உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு நன்மை கிடைக்குமா? என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
இதன்படி இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.9 பில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெற்றால், அதன்பின்னர் இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியும் பாரிய உதவிகளை வழங்கும் என்று கூறியுள்ளார்.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பணிக்குழாம் மட்ட உடன்படிக்கை, சிறந்த முன்னேற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.