Wednesday, May 14, 2025
27.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுற்றுலா பயணிகளுக்கு டொலர்களில் பயணச்சீட்டு விற்க ஆலோசனை

சுற்றுலா பயணிகளுக்கு டொலர்களில் பயணச்சீட்டு விற்க ஆலோசனை

சுற்றுலா பயணிகளுக்கு டொலர்களில் பயணச்சீட்டினை விற்பனை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச பண அலகின் திரவ நிலையானது பாதிக்கப்பட்டுள்ளமையினால் பயணச்சீட்டிற்கும் டொலர்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த திட்டம் தொடர்பில் மத்திய வங்கிக்கு விளக்கமளித்து அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும், நட்சத்திர உணவகங்களிலும் நாட்டின் பல சாதாரண உணவகங்களிலும் கட்டணங்கள் டொலர்களில் அறவிடப்படுகின்ற நிலையில், அரசாங்கத்திற்கு ஏன் சுற்றுலா பயணிகளுக்கான பயணச்சீட்டுக்களுக்குரிய கட்டணத்தை டொலரில் அறவிட முடியாது என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக ரயில் மற்றும் பொது போக்குவரத்துக்கு தேவையான உதிரிபாகங்களை தாமதமின்றி இறக்குமதி செய்துக்கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles