காட்டு யானைகளை விரட்டுவதற்குத் தேவையான வெடிப் பொருட்களுக்காக அரசாங்கம் வருடாந்தம் 2800 மில்லியன் ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வருடாந்தம் 14 இலட்ச வெடிப் பொருட்கள் தேவைப்படுவதாகவும், அவற்றை உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும் போது அவற்றை விரட்ட வனவிலங்கு திணைக்களம் மக்களுக்கு இலவசமாக யானை வெடிகள் வழங்கப்படுகிறது.
மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக,எதிர்காலத்தில் யானைக்குண்டுகள் கொள்வனவுக்கு தற்போதைய தொகையை விட அதிக பணம் செலவிட நேரிடும் எனவும் வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.