Monday, July 21, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது

நாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, கடந்த காலத்தில் நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று (27) மதுவரித் திணைக்களத்துக்கான கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன்போது, ஊடங்களுக்கு கருத்துவெளியிட்ட மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி, 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக 22 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles