Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுகர்வுக்கு உகந்ததல்லாத சீனி தொகையுடன் இருவர் கைது

நுகர்வுக்கு உகந்ததல்லாத சீனி தொகையுடன் இருவர் கைது

மனித பாவனைக்கு உதவாத சீனியை பதுக்கி வைத்திருந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பேலியகொட, நாவனுகே வீதி பகுதியில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​நுகர்வுக்குத் தகுதியற்ற 3,00 கிலோகிராம் சீனி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 41 மற்றும் 48 வயதுடைய பேலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சீனி தொகை மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட பொதுச் சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடம் எதிர்கால நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles