Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு60 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

60 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளில் சுமார் 60 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என்றால், உடனடியாக மனிதாபிமான உதவிக்கு அழைப்பு விடுக்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடனுதவி கடிதங்கள் வழங்குவதில் ஏற்படும் தாமதம், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையினால் மருந்துகளை பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம் போன்ற காரணங்களால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பட்டியலில் மிக அத்தியாவசியமான 3 மருந்துகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் சில இதய நோயாளிகள், புற்றுநோயாளிகள், தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பல்வேறு நோய்களுக்காக வழங்கப்படுபவை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இரண்டு வாரங்களில் இந்த மருந்து தட்டுப்பாடு மோசமான நிலையை அடையக்கூடும் என அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles