Monday, July 21, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிரிபோஷவின் தர ஆய்வு அறிக்கை விரைவில் அறிவிக்கப்படும்

திரிபோஷவின் தர ஆய்வு அறிக்கை விரைவில் அறிவிக்கப்படும்

திரிபோஷ தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெற உள்ளதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகளே இவ்வாறு கிடைக்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.

அந்த அறிக்கைகள் கிடைத்ததன் பின்னர் திரிபோஷவின் தரம் குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, உரிய குறியீட்டின் படி உற்பத்தி செய்யப்படும் திரிபோஷ, சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

திரிபோஷ உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளத்திலுள்ள அஃப்லடோக்சின் (Aflatoxin) வீதம் தொடர்பிலான அறிக்கையும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles