சர்வதேச நாணய நிதியம் இந்த வருட இறுதி வரை இலங்கைக்கு ஐந்து சதம் கூட வழங்காது என ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் செயற்பாடுகள் காரணமாக நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையலாம்.
சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து அந்நியச் செலாவணியை அடுத்த மூன்று நான்கு மாதங்களில் ஈட்டாவிட்டால் நாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.