எதிர்வரும் இரண்டு நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வார இறுதியிலிருந்து மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.