Friday, May 9, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண உயர்வு தொடர்பில் கலந்துரையாடல்

மின் கட்டண உயர்வு தொடர்பில் கலந்துரையாடல்

மத ஸ்தலங்களில் மின்சார கட்டண பிரச்சினை தொடர்பில் மின்சார சபை மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு இடையில் இன்று (26) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

புதிய மின் கட்டண திருத்தத்துடன் மத ஸ்தலங்களில் மின் கட்டணம் உயர்வடைந்தமை தொடர்பில் புத்தசாசன அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சில சமய ஸ்தலங்களில் ஆசிரமக் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் தருணத்திலும், ஒரு விகாரையில் அதிகளவான துறவிகள் தங்கி இருக்கும் போதும் மின்சார பாவனை ஒப்பீட்டளவில் அதிகரிப்பது தொடர்பாகவும், மேலும் சில விடயங்கள் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்த வேண்டும் என செயலாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles