Tuesday, September 16, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்இத்தாலி ஆட்சியில் மாற்றம் ஏற்படும் சாத்தியம்

இத்தாலி ஆட்சியில் மாற்றம் ஏற்படும் சாத்தியம்

இத்தாலி தேர்தலில், பிரதர்ஸ் ஒப் இத்தாலி கட்சியின் தலைவர் (Giorgia Meloni)  வெற்றிபெறுவார் என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு முந்திய கருத்துக்கணிப்புகளின் படி, Giorgia Meloni  வெற்றிபெறுவார் எனவும், அவர் வெற்றிபெறும்பட்சத்தில் இத்தாலியின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுக்கொள்ளவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டாம் உலக போருக்கு பின்னர் இத்தாலியில் வலது சாரி அரசாங்கத்தின் ஆட்சி அமையவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார அடிப்படையில் இத்தாலி மூன்றாவது இடத்தில் உள்ளது.

அந்த நாட்டு தகவல்களின் படி, Giorgia Meloni இந்த தேர்தலில் 22 முதல் 26 சதவீதம் வரையான வாக்குகளை பெறுவார் என தேர்தல் முடிவுகளுக்கு முன் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles