Monday, September 15, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்TTF வாசனுக்கு எதிராக வழக்கு

TTF வாசனுக்கு எதிராக வழக்கு

அதிவேகமாகவும், மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் மோட்டார் சைக்கிளில் பயணித்தமைக்காக யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை மாநகர பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி டிடிஎப் வாசன் அவரது மோட்டார் சைக்கிளில் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து பாலக்காடு பிரதான வீதி அருகே அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக பயணித்து அதை காணொளியாக பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பில் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டப்படி வாகனம் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது.

ஆனால் இந்த பயணத்தின்போது ஜி.பி.முத்து ஹெல்மட் அணியாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles