இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த மூன்று எரிவாயு கப்பல்களில் ஒன்றுக்கான பணம் செலுத்தப்பட்டதை அடுத்து முத்துராஜவெல எரிவாயு முனையத்திற்கு எரிவாயு அனுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எரிவாயு ஏற்றி வந்த மூன்று கப்பல்கள் வத்தளை, உஸ்வெட்டகேயாவ மற்றும் தல்தியவத்தை கடற்பரப்பில் சுமார் ஏழு நாட்களாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
இதன்படி, தல்தியவத்தை எரிவாயு நிலையத்திலிருந்து முத்துராஜவெல எரிவாயு முனையத்திற்கு 2,500 மெட்ரிக் டன் எரிவாயுவை அனுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எரிவாயுவை ஏற்றி வந்த மற்றுமொரு கப்பலுக்கான கொடுப்பனவுகள் இன்று (08) செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது