இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை காலி முகத்திடலில் முன்னெடுப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வுகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாய் எழுவோம் என்ற தொனிப்பொருளில் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.