நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதை விட்டுவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று மகாராணியின் மறைவுக்கு ஆறுதல் கூறுவது ஜனாதிபதிக்கு முக்கியமானதாகவுள்ளதாக விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ்வாறான பயணங்களுக்கு தேவையான டொலர்களும் அரசாங்கத்திடம் உள்ளது.
அண்டை நாடான இந்தியா கூட அவ்வாறு செய்யவில்லை.
இந்தக் குழு இன்னும் அடிமை மனப்பான்மையிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டினார்.