இலங்கையில் வாழும் இந்தியர்களிடம் இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு என்ற செய்தியை பரப்புமாறு சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை பாதுகாப்பற்ற நாடாக மாறிவிட்டதாக கூறுகின்ற பல எதிர்மறையான கருத்துக்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் வீதியில் பட்டினி கிடக்கவில்லை, தெருக்களில் இறக்கும் நபர்களும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.