Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரணத்துக்கு பின்னரே மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் - அசேல சம்பத்

மரணத்துக்கு பின்னரே மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் – அசேல சம்பத்

அரசாங்கம் பொதுமக்களுக்கு உறுதியளித்த அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரணம், பொதுமக்களின் மரணத்திற்குப் பின்னரே கிடைக்கும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மக்கள் உயிருடன் இருக்கும் போது அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரணம் கிடைக்காது என்று குறிப்பிட்டார்.

இந்த அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் காரணமாகவே இந்த நாடு பரிதாபகரமான நிலைக்கு சென்றுள்ளதாகவும் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கூடிய விரைவில் அரசாங்கத்தை கலைத்து ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை நியமித்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சி தலைவரிடம் அவர் கோரிக்கையை முன்வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles