Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅழகுசாதன பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குக

அழகுசாதன பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குக

அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்பனை தொழில்துறை சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சுங்கத் தரவுகளின்படி அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதிக்கான செலவு 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டிற்கும் (1 ஜனவரி 2021 – 31 ஜூலை 2022) மொத்த இறக்குமதி கட்டணத்தில் 0.1% ஐ விட அதிகமாக இல்லை என குறித்த சம்மேளனம் தெரிவித்துள்ளது

ஒப்பனைப் பொருட்களின் இறக்குமதிக்கான தற்காலிகத் தடையானது, நாட்டிற்கு அன்னியச் செலாவணியை உருவாக்கக்கூடிய பல அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான தொழில்களையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக ஒப்பனை தொழில்துறை சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்மூலம், எதிர்வரும் கிறிஸ்தமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு தற்காலிக தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஒப்பனை தொழில்துறை சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles