ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் டொம் மூடி, அவருடைய பதவியிலிருந்து விலகிக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை உறுதி செய்தது.
மூன்று வருட ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்திருந்த டொம் மூடி, தற்போது ஒன்றரை வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
எனினும் இலங்கை கிரிக்கெட்டின் பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தொடர்ந்தும் செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
#Sunday Times