Sunday, September 14, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 நிமிடங்களில் ஒரு இலட்சம் ரயில் இருக்கைகள் முன்பதிவு

10 நிமிடங்களில் ஒரு இலட்சம் ரயில் இருக்கைகள் முன்பதிவு

ரயில்களில் இருக்கை முன்பதிவு செயல்முறையை மறுசீரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பிற போக்குவரத்துச் செலவுகள் அதிகமாக உள்ளதால், மக்கள் ரயில் பயணங்களை அதிகமாக தெரிவு செய்கின்றனர்.

இதன்படி சுமார் 10 நிமிடங்களில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரயில் இருக்கைகள் ஒன்லைனில் முன்பதிவு செய்யப்படுகின்றன.

தினமும் காலை 10.00 மணிக்கு ஒன்லைன் மூலம் ரயில் இருக்கை முன்பதிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முன்பதிவு நடவடிக்கை சுமார் 10.10 மணிக்கு முடிவடையும்.

எனவே இருக்கை முன்பதிவுக்கான 14 நாட்கள் அவகாசம் 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

இதுதவிர முன்பதிவு செய்ய வேண்டிய ரயில் இருக்கைகளில் 60 சதவீதம் ஒன்லைனிலும், 40 சதவீதம் ரயில் நிலையத்திலும் கிடைக்குமாறு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles