எரிபொருளை இறக்குமதி செய்வது தொடர்பில் ரஷ்யாவுடன் இன்று(20) இலங்கை முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் ரஷ்ய எரிசக்தி அமைச்சருக்கு இடையில் இன்று சூம் ஊடாக இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.