எல்லை தாண்டி மீன்பிடித்த 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம்(20) கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் ஒரு படகுடன் அவர்கள் கைதாகினர்.
கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, யாழ் மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவர்.
பின்னர் அவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.