Tuesday, July 22, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதாது - ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதாது – ஜோசப் ஸ்டாலின்

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிட்ட அரசியல்வாதிகள் தற்போது மக்களின் வரிப்பணத்தில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டு, மக்களின் வாழும் உரிமையை பறித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை எதிர்த்து போராடி வரும் மக்கள் போராட்டங்களை அடக்கி ஆட்சியாளர்கள் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது.

அத்துடன், போராட்டம் ஒரு நாள் இந்த அரசாங்கத்தை அழித்துவிடும்.

நாட்டு மக்களின் எதிர்ப்பின் காரணமாக இலங்கைக்கு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்களின் வரிப்பணத்தில் தங்கி சுகபோகம் அனுபவித்து வருவது தொடர்பில் தமது குழுவினர் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles