சுகாதார துவாய்களின் விலை அதிகரிப்பு காரணமாக பெண்கள் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தற்போது சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பல வரிகள் நீக்கப்படவுள்ளதுடன், பெண்கள் மற்றும் சிறுவர் பராமரிப்புக்கான அமைச்சரவையின் பதில் அமைச்சர் கீதா குமாரசிங்க இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியாக அறிவித்துள்ளார்.
சுகாதார துவாய்களின் விலை உயர்வால் மாணவிகள் பள்ளிக்கு சமூகமளிக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,இது ஆடம்பரப் பொருள் அல்ல. பெண்களின் சுகாதாரத்துக்கு அத்தியவசியமானவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
