புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான ஊக்குவிப்பு தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்ற முக்கிய துறையான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மூலம், வருடாந்தம் 7 முதல் 8 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கின்றது.
அவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு பண அனுப்புதலை ஊக்குவிப்பதற்காக ஒரு டொலருக்கு 10 ரூபா ஊக்குவிப்பு தொகை இதுவரை வழங்கப்பட்டது.
இந்தநிலையில் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நாட்டுக்குப் பணம் அனுப்புதலை ஊக்குவித்தல் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை பாராட்டுதல் போன்ற காரணிகளுக்காக குறித்த ஊக்குவிப்பு தொகையை 38 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.