போராட்டக்காரர்களால் காலி முகத்திடலில் உள்ள கட்டிடங்களுக்கு 6 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுக அதிகார சபையினால் மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கடைகள், பெஞ்சுகள், சுவர்கள் மற்றும் ஏனைய கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் ஆய்வு விஜயத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பழுதடைந்த கடைகளை விற்பனையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு முன், அவற்றை புனரமைப்பதற்கான செலவை துறைமுக அதிகாரசபை ஏற்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.