Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடமிருந்த 26 இலட்சம் ரூபா மாயம்

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடமிருந்த 26 இலட்சம் ரூபா மாயம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் வழக்குப் பொருளான 26 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகளின் பிடியில் இருந்த இந்தப் பணம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போனது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒரு அதிகாரி மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மற்றுமொரு சோதனையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பணத்தை கொண்டு, காணாமல் போன இந்த தொகையை வழங்கி சிலர் இந்த திருட்டை மூடிமறைக்க முயற்சிப்பதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles