Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇருபதுக்கு20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் தயார்

இருபதுக்கு20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் தயார்

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாமிற்கு அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் பரிந்துரையின்படி, இருபதுக்கு 20 உலகக் கிண்ண இலங்கை குழாமுக்கு நேற்று (13) அளித்துள்ளதாகவும், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட குழாம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதுடன், ஒக்டோபர் முதல் வாரத்தில் பல்லேகலவில் நடைபெறும் பயிற்சி முகாமின் பின்னர், போட்டிக்கான அணி புறப்பட உள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு முன்னர் சிம்பாப்வே மற்றும் அயர்லாந்துக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் இலங்கை பங்கேற்கவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles