மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகளாவிய செயல்திறன் தலைவராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
மஹேல ஜயவர்தன இதற்கு முன்னர் பல தடவைகள் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
அவரது பயிற்சியின் கீழ், மும்பை இந்தியன்ஸ் 2019 இல் இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது.
மஹேல ஜெயவர்தன இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார்.
மேலும் அவரது புதிய பதவியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை.