எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால், மது தயாரிப்பதற்கு போதியளவு எத்தனோல் கிடைப்பதில்லை என மது உற்பத்தி நிறுவனங்கள், மதுவரி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளன.
செவனகல, பெல்வத்த மற்றும் கலோயா சீனி தொழிற்சாலைகள் கரும்புகளை பயன்படுத்தி உள்நாட்டில் எத்தனோல் உற்பத்தி செய்கின்றன.
அத்துடன் மற்றுமொரு நிறுவனம் சோளத்தைப் பயன்படுத்தி எத்தனோல் தயாரிப்பில் ஈடுபடுகிறது.
கடந்த 2020 ஜனவரி முதல் எத்தனோல் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்தது,
இந்நிலையில், நாளாந்தம் 24,000 லீற்றர் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதாக கலோயா சீனி தொழிற்சாலையின் பொது முகாமையாளர் வருண மதுஷன் தெரிவித்தார்.
பெல்வத்த சீனி தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 20,000 லீற்றர் மற்றும் செவனகல தொழிற்சாலையில் 18,000 லீற்றர் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுகிறது.
எவ்வாறாயினும், இலங்கையின் முன்னணி மது உற்பத்தி நிறுவனம், தமது தயாரிப்புகளுக்கு நாளொன்றுக்கு 80,000 லீற்றருக்கு மேல் எத்தனோல் தேவைப்படுவதாக மதுவரி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
டீசல் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக மின் உற்பத்தி இயந்திரங்களை வாடகைக்கு எடுப்பதால் கல்ஓயா சீனி தொழிற்சாலைக்கு மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், தேவைக்கேற்ப எத்தனோல் கிடைக்காவிடின், மார்ச் 22 முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என நாட்டின் முன்னணி மது உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.