Saturday, September 13, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசதொச ஊடாக அரிசி கொள்வனவு செய்ய தீர்மானம்

சதொச ஊடாக அரிசி கொள்வனவு செய்ய தீர்மானம்

சதொச ஊடாக அரிசியை கொள்வனவு செய்து விற்பனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு போதியளவு நெல் கிடைக்காமையால் நெல் கொள்வனவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வாக பதில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்வனவு தொடர்பான வாழ்க்கைச் செலவு தொடர்பில் உபகுழுவில் கலந்துரையாடி தீர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் உணவு கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக ஆரம்பிக்கப்பட்ட அரிசி இறக்குமதியை படிப்படியாக குறைத்து பின்னர் நிறுத்த அமைச்சரவை தீர்மானித்தது.

குறிப்பிட்ட சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதித் தடையை 15 நாட்களுக்கு ஒரு முறை மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கலந்துரையாடி தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தவுடன் இந்த தற்காலிக தடை முழுமையாக நீக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles