எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளதாக கோழிப்பண்ணை தொழில் துறையினர் தெரிவித்தனர்.
2021ஆம் ஆண்டு 80,000 கோழிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 7000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.