கோட்டை மிதக்கும் சந்தை பகுதியை மையமாக கொண்டு போராட்டக்காரர்களுக்கு தமது புதிய வடிவமைப்புகளை காட்சிப்படுத்த புதிய வளாகம் அமைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜனாதிபதி அலுவலகப் பிரதம அதிகாரி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இளைஞர் சமூகம் மற்றும் அரச நிறுவனங்களின் உதவியுடன் இந்த வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கலை, இலக்கியம், தகவல் தொழிநுட்பம், இலவச சந்திப்பு, கருத்துப் பரிமாற்றம், கலந்துரையாடல் போன்றவற்றுக்கான வசதிகள் இந்த வளாகத்தில் ஏற்படுத்தப்படும்.
மேலும், கலைக் கண்காட்சிகள், இசை விழாக்கள் நடத்தக்கூடிய இடங்கள் மற்றும் உணவகங்கள் இங்கு நிர்மாணிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இளைஞர்களின் திறமைக்கு பொருளாதார ரீதியாக பெறுமதி சேர்க்கும் வகையில் இந்த வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், அது தொடர்பான சேவை வசதிகளை அரசாங்கம் வழங்கும் என குறிப்பிட்டார்.