இலங்கை எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு பல துறைகளில் ஆதரவை வழங்க எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகைள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.