Monday, September 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரமிட் நிதி முதலீடு மோசடி – ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை

பிரமிட் நிதி முதலீடு மோசடி – ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை

பிரமிட் முறைமைக்கு நிதி முதலீடு செய்த தரப்பினரிடம் இருந்து 800 கோடி ரூபாய்க்கும் அதிக நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் தனியார் நிறுவனம் ஒன்றின் 5 பிரதானிகளுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்னாயக்க தடைவிதித்துள்ளார்.

இதன்படி, அவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மோசடியில் சிக்குண்ட ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாட்டாளர்கள் உள்ளதாகவும் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

மஹரகமை, குருநாகல், பொல்பித்திகம, கிரிபாவ மற்றும் நிக்கவரெட்டிய ஆகிய பகுதிகளைச் சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் ஐந்து பிரதானிகளுக்கே இந்த வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles