Monday, July 21, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெள்ளவத்தை கடற்பகுதியில் சுற்றி திரியும் 40 முதலைகள்

வெள்ளவத்தை கடற்பகுதியில் சுற்றி திரியும் 40 முதலைகள்

வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகள் சுற்றி திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கின்ரோஸ் உயிர்காக்கும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வெள்ளவத்தை கடலில் நீராடும் போது முதலை குட்டியொன்றை பிடித்துள்ளார்.

பிடித்த குறித்த முதலைக் குட்டியை அவர் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சவோய் சினிமாவிற்கு அருகில் உள்ள கால்வாயில் நான்கு பெரிய முதலைகளை அவதானிக்கப்பட்ட நிலையில், வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகளை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முதலை அச்சுறுத்தல் குறித்து கின்ரோஸ் உயிர்காப்பு நிறுவனம் வனவிலங்கு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கடலில் குளிப்பதும் ஆபத்தாக மாறியுள்ளது.

கடந்த வருடம் தெஹிவளையில் மீனவர் ஒருவர் முதலையால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடலில் குளிக்க செல்லும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles