Friday, February 13, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேலும் 10 அமைச்சர்களை நியமிக்க முடியும் - பிரசன்ன ரணதுங்க

மேலும் 10 அமைச்சர்களை நியமிக்க முடியும் – பிரசன்ன ரணதுங்க

மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கும் சாத்தியம் இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சராக தேனுக்க விதானகமகே தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்ட போது அதில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இராஜாங்க அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்கள், நாடாளுமன்ற உறுப்பினருக்கான வேதனத்தை மாத்திரமே பெற்று செயற்படுகின்றனர்.

மட்டுப்படுத்தபட்ட அளவிலேயே அவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles