Wednesday, July 23, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடு டைட்டானிக் கப்பல் போல் மூழ்கிக் கொண்டிருக்கிறது - சஜித்

நாடு டைட்டானிக் கப்பல் போல் மூழ்கிக் கொண்டிருக்கிறது – சஜித்

ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியானது ராஜபக்ஷர்களின் ஆசியுடன் என்பது உண்மையே என்றாலும், முன்னாள் ஜனாதிபதியும்இ முன்னாள் பிரதமரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டது இந்நாட்டின் பொது மக்கள் போராட்டத்தினாலையே என்பதை அவர் மறந்துவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அதை அவர் நினைவில் வைத்திருந்தால்இஅவரால் இவ்வளவு கடுமையாக அடக்குமுறையை அமுல்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தெஹிவளை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (10) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மோசமான ஆட்சி மிக்க அரசாங்கத்தை மாற்றுவதற்கு கொள்கை ரீதியாக தலையிட்டதற்காக, கடந்த மே மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் 3,500 இக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், 1,200 இக்கும் அதிகமானோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளdu;.

தற்போதைய அரசாங்கம் முழு நாட்டு மக்களையும் மரணப் படுக்கைக்கு இட்டு வருவதாக தெரிவித்த அவர், டைட்டானிக் கப்பலைப் போல நாடு மூழ்கும் போது, ​அரசாங்கம் சுய நினைவிழந்தது கேளிக்கை நடனமாடுவதாக குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles