இப்பலோகம பகுதியில் உள்ள ஜய ஆற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
குறித்த ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற போதே அவர் ஆற்றுக்குள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பலோகம பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (07) மாலை காணாமல் போன குறித்த சிறுவன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.