யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான செலவினங்களை அதிகரிப்பதற்கு அமெரிக்க, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலை காணொளி ஊடாக நேற்று கலந்துரையாடியுள்ளனர்.
யுக்ரைனுக்கான பாதுகாப்பு பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்தும் வழங்குவதற்கு அவர்கள் இதன்போது இணங்கியுள்ளனர்.