Tuesday, June 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉரங்களை கொள்வனவு செய்வதில் சிக்கல்

உரங்களை கொள்வனவு செய்வதில் சிக்கல்

உலக சந்தையில் இருந்து உரங்களை கொள்வனவு செய்வதில் விவசாய அமைச்சு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் இருப்பு பற்றாக்குறையை காரணம் காட்டி சில உர விநியோகஸ்தர்கள் உரத்தை வழங்க மறுத்து வருவதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உரம் கொள்வனவு செய்வதில் இலங்கை முன்வைத்த நிபந்தனைகளுக்கு சர்வதேச உர விநியோகஸ்தர்கள் உடன்பட மறுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 10,000 மெட்ரிக் டன் உரம் அமைச்சிடம் கையிருப்பாக உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும் போகத்திற்கு முன்னர் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கும் விவசாயிகளுக்கு இருப்பு உரத்தை வழங்குவதற்கு அமைச்சு உத்தேசித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles