இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாடும் போது இந்திய வீரர்கள் காட்டும் ஆக்ரோஷத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஆசியக் கிண்ணம் போன்ற பெரிய போட்டியில் இந்திய வீரர்களின் குறைந்த செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று இலங்கைக்கு எதிரான இந்தியாவின் தோல்வி இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான தொடர்ச்சியான தோல்வி, இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மாவின் திறமையின்மையைக் காட்டுகிறது என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.
அத்துடன் #Boycott IPL, #SackRohit என்ற ஹேஷ்டெக்கையும் கிரிக்கெட் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதேவேளை பாகிஸ்தானின் அணியின் பிரபல ஆதரவாளர் மொமின் சாகிப், இந்திய அணி, நாட்டிற்காக போட்டிகளை வெல்லும் விருப்பத்தை இழந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
ரோஹித் ஷர்மாவையும் கிரிக்கெட் ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை. ரசிகர்கள் அவரை இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலியுடன் ஒப்பிட்டுள்ளனர்.