முறையான பயிற்சி இல்லாமல் பச்சை குத்துவது ஆபத்தானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நாட்டில் பச்சை குத்தும் தொழிலில் ஈடுபடும் பெரும்பாலானோர் அதற்கான முறையான பயிற்சிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்காக பயன்படுத்தப்படும் சாயங்கள் தொடர்பில் அறிவுறுத்தாமை, பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் பாதகமான நிலைமைகள் ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.