Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகத்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

செப்டெம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டெம்பர் 21ஆம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையிலும் ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக இலங்கை அல்சைமர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலை இப்படியே அதிகரிக்கும் பட்சத்தில் எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் இலங்கையில் அரை மில்லியனுக்கும் அதிகமான ஞாபகமறதி நோயாளர்கள் காணப்படக் கூடும் எனவும் அல்சைமர் சங்கம் எதிர்வு கூறியுள்ளது.

கடந்த காலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்ட கொரோனா தொற்று காரணமாகவும், ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அல்சைமர் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது

Keep exploring...

Related Articles