சீரற்ற காலநிலையினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதன்படி, அனைத்து மாவட்டச் செயலாளர்கள் ஊடாக இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
பேரிடர் சூழ்நிலைக்கு முன்கூட்டியே தயாராகி, மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் பிரதமர் மக்களுக்கு அறிவித்துள்ளார்.